சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் கட்டாயமாக்கப்படுகிறதா ஹிந்தி?

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில்,  மும்மொழி பாடத் திட்டம் உள்ளது. அதன்படி, ஹிந்தி பேசும் மாநிலங்களில், ஹிந்தி, ஆங்கிலம் தவிர, மூன்றாவது மொழியும், ஹிந்தி பேசாத மாநிலங்களில், தாய்மொழி, ஆங்கிலம்  தவிர, மூன்றாவது மொழியும் கற்றுத் தரப்படுகின்றன. இந்த பாடத்திட்டத்தின் நோக்கம், மாணவர்கள் தங்கள் தாய்மொழியுடன், மற்றொரு இந்திய மொழியை கற்க வேண்டும் என்பதே.  ஆனால், சில பள்ளிகளில், மூன்றாவது மொழியாக பிரெஞ்ச், ஜெர்மன் உள்ளிட்ட  வெளிநாட்டு மொழிகள் கற்றுத் தரப்படுகின்றன. 

எனவே, ஹிந்தி பேசும் மாநிலங்களில், ஹிந்தி, ஆங்கிலத்துடன், மூன்றாவது மொழியாக, இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், ஹிந்தி பேசாத மாநிலங்களில், தாய்மொழி, ஆங்கிலம், இவற்றுடன் மூன்றாவது மொழியாக ஹிந்தி கற்றுத் தரப்படும்.

இதன் விளைவாக, தமிழகம் மட்டுமல்லாது, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட ஹிந்தி பேசாத மாநிலங்களில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஹிந்தி கட்டாயம் எனும் சூழல் உருவாகியுள்ளது.