சென்னை பல்கலைக்கழகத்தில் விருப்ப மொழி பாடமாக ஹிந்தி

University of Madras

மிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் விருப்ப மொழி பாடமாக, ஹிந்தியை அறிமுகம் செய்ய உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

முதற்கட்டமாக, சென்னை பல்கலைக்கழகத்தில் ஹிந்தி விருப்ப மொழி பாடத் திட்டம் அமலுக்கு வர உள்ளது. தேசிய மொழி என்பதால் பெரும்பாலான மாணவர்கள், ஹிந்தி படிக்க ஆர்வமாக உள்ளதாகவும், இது குறித்து, சென்னை பல்கலையின் சிண்டிகேட் மற்றும் அகாடமிக் கவுன்சிலில் ஒப்புதல் பெற்று, அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படும் என்றும்  உயர்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.