சமைக்கலாம், சுவைக்கலாம் : பருப்பு உருண்டை குழம்பு

தேவையான பொருட்கள் :

உருண்டை செய்ய : 
 • கடலைப்பருப்பு - அரை கப்
 • துவரம் பருப்பு - ஒரு டேபிள்  ஸ்பூன்
 • காய்ந்த மிளகாய்  - 4,
 • சோம்பு - அரை டீஸ்பூன்,
 • சின்ன வெங்காயம் - பொடியாக நறுக்கியது - ஒரு கரண்டி 
 • பூண்டு  - பொடியாக நறுக்கியது - டேபிள்  ஸ்பூன்
 • கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்  ஸ்பூன்
 • தேங்காய்  துருவல்  - ஒரு டேபிள்  ஸ்பூன்
 • உப்பு - தேவைக்கேற்ப

குழம்பு வைக்க :
 • பெரிய வெங்காயம் -  2
 • தக்காளி -  3
 • மிளகாய் தூள் - இரண்டு  டேபிள்  ஸ்பூன்
 • தனியாதூள் -  ஒரு  டீஸ்பூன்ம
 • மஞ்சள் தூள் -  கால் டீஸ்பூன்பு
 • புளி - எலுமிச்சை அளவு
 • சிறிய பூண்டு - 1 
 • கறிவேப்பிலை - சிறிதளவு 
 • கொத்தமல்லித்தழை -  சிறிதளவு 
 • உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க : சோம்பு - சிறிதளவு, எண்ணெய் - சிறிதளவு 

செய்முறை : துவரம் பருப்பு, கடலை பருப்பு இரண்டையும்  ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அதனுடன், காய்ந்த மிளகாய், சோம்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும். இதனுடன், நறுக்கிய வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, மல்லி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து மற்ற பொருட்களையும் சேர்த்து பிசைந்து, இட்லி கொப்பரையில் வைத்து அரை வேக்காடு வேக வைக்கவும்.

வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும் . புளியை  தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி தாளிக்கும் பொருட்களை சேர்க்கவும். நறுக்கிய வெங்காயம், தக்காளியை அதனுடன் சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் கரைத்து வாய்த்த புலி தண்ணீரை சேர்க்கவும். அதில் மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். குழம்பு கொதிக்கும்போது, அதில்  பருப்பு உருண்டைகளை போடவும். உருண்டை நன்கு வெந்ததும், கறிவேப்பிலை, மல்லித்தழை தூவி இறக்கவும்.