ரயில் முன்பதிவு; உச்ச வரம்பு உயர்வுஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், ஒருவர், ஒரு மாதத்தில், அதிகபட்சமாக  ஆறு முறை மட்டுமே  ரயில் முன்பதிவு செய்ய முடியும். ஆதார் எண்ணுடன், மொபைல் போன் எண்ணை இணைத்தவர்களை, ஊக்குவிக்கும் விதமாக, இதற்கான உச்ச வரம்பு 12 முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. 

முன்பதிவு செய்பவரின் ஆதார் எண், உடனடியாக சரிபார்க்கப்பட்டு, முன்பதிவு செய்யப்படும். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்யும் பட்சத்தில், ஒரு பயணியாவது ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என்று ஐ.ஆர்.சி.டி.சி. செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.