ரேஷன் பொருட்கள் வாங்க ஸ்மார்ட் கார்டு தேவையில்லை?


ரேஷன் கடையில், தற்போது 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி மூலம் 'ஸ்மார்ட் கார்டு' பதிவு செய்யப்பட்டு, பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த கருவியில், ரேஷன் கார்டுதாரரின்  மொபைல் போன் எண்ணும் பதிவாகியுள்ளது.

இதனால்,ரேஷனில் பொருட்கள் வாங்க, ஸ்மார்ட் கார்டு எடுத்து செல்ல தேவையில்லை. மொபைல் போன் எடுத்து சென்றால் போதும். ரேஷன் கடை ஊழியர்,  மொபைல் எண்ணை கருவியில் பதிவு செய்ததும், கார்டுதாரரின் மொபைலுக்கு, 'ஒன் டைம் பாஸ்வேர்டு' வரும். அந்த எண்ணை ஊழியரிடம் காட்டினால், அதை பதிவு செய்து, பொருட்கள் தரப்படும். அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி முடிவடைந்ததும், மொபைல் எண் வாயிலாக, பொருட்கள் வழங்கும் சேவை அதிகாரபூர்வமாக செயல்படுத்தப்படும்.