அஞ்சலக சேமிப்பு கணக்கு துவங்க ஆதார் அவசியம்

அஞ்சலக சேமிப்பு கணக்கு, வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு பத்திரம், கிசான் விகாஸ் பத்திரம் போன்றவற்றுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டு ள்ளது.  

புதிதாக இந்த கணக்குகளை துவங்குவோர் ஆதார் எண்ணுடன் கணக்கு துவங்க வேண்டும் என்றும், ஏற்கனவே இவற்றில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தங்களது கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. 
ஆதார் எண் இல்லாத வாடிக்கையாளர்கள், ஆதார் எண்ணுக்கு  விண்ணப்பித்த போது அளிக்கப்பட்ட விண்ணப்ப எண்ணை பதிவு செய்யலாம்.