கெயில் - அரசியல் எதிர்ப்பும்; சந்தை வளர்ச்சியும்


தமிழக விவசாய நிலங்களில், எரிவாயு குழாய் பதித்து வருவதாக கெயில் நிறுவனத்திற்கெதிராக, அரசியல் கட்சிகள், விவசாயிகள், பொதுமக்கள் என அணைத்து தரப்பினரும் குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், கெயில் நிறுவனம் வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கிறது.

மக்களுக்காகவே அரசு செயல்படவேண்டும்; மக்கள் விரோத நடவடிக்கைகளில் அரசு ஈடுபடக்கூடாது என்பதெல்லாம் சாமானியனின் வாதம் மட்டுமே. ஒருபோதும் அரசு அதற்கு செவி சாய்க்காது. பெரு நிறுவங்களின் வளர்ச்சியே, தேசத்தின் வளர்ச்சி என்பது அரசியல் கட்சிகளின் எழுதப்படாத சட்டம். 

நேற்றைய காங்கிரஸ் அரசும் சரி, இன்றைய பா.ஜ.க. அரசும் சரி - இதற்கு விதிவிலக்கல்ல. ஒருவேளை, நாளை கம்யூனிஸ்டுகள் ஆட்சி அமைத்தாலும் இதுவே நடக்கும். முதலாளிகளின் பிடியிலிருந்து அரசும், சாமானியனும் எளிதில் விடுபட முடியாது என்பேதே நிதர்சனம்.

விஷயம் என்னவென்றால், பெரு நிறுவனங்களின் வளர்ச்சியில் சாமானியன் எப்படி லாபம் அடைவது என்பதை பார்ப்பதே.... கெயில் நிறுவன பங்கு விலை கடந்த 2000 ஆண்டு வாக்கில் ரூபாய் 18.00. இன்று அதன் விலை ரூபாய் 452.70. 

2000-ஆவது ஆண்டில், 18000 ரூபாய் முதலீடு செய்து 1000 பங்குகள் வாங்கியிருந்தால், இன்றைய அதன் மதிப்பு ரூபாய் ரூபாய் 9,54,000.

அது எப்படி? 1000 பங்குகள் x 452.70 = 4,52,700 என்பதுதானே கணக்கு என்று கேட்கிறீர்களா? அது பள்ளிக்கூட கணக்கு. இது பங்கு சந்தை கணக்கு.
  • வாங்கிய பங்குகள் 1000 x 18.00 = 18,000
  • 2008 அக்டோரில் 1:2 போனஸ் - இரண்டு பங்குகளுக்கு ஒரு பங்கு போனஸ் - அதாவது 1000 பங்குகளுக்கு 500 பங்குகள் போனஸ் = 1000+500 = 1500 பங்குகள்.
  • 2017 மார்ச் 1:3 போனஸ் - மூன்று  பங்குகளுக்கு ஒரு பங்கு போனஸ்  அதாவது 1500 பங்குகளுக்கு 500 பங்குகள் போனஸ் = 1500+500 = 2000 பங்குகள்.
  • தற்போது கையில் 2000 பங்குகள் உள்ளது. 2000 x 452.70 = 9,54,000.
லாப கணக்கு புரிந்ததா? இது இல்லாமல் ஆண்டு தோறும், நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு  லாபத்தை பகிர்ந்தளிக்கும். இது டிவிடெண்ட் எனப்படும். இந்த கணக்கில் டிவிடெண்ட் லாபம் சேர்க்கப்படவில்லை. 2017ம் ஆண்டில் மட்டும் இந்நிறுவனம், பங்கு ஒன்றுக்கு ருபாய் 8.50 டிவிடெண்டாக வழங்கியுள்ளது.

விப்ரோ நிறுவனத்தில் 10000 ருபாய் முதலீடு, 300 கோடியை தாண்டிய பங்கு சந்தை கணக்கு தெரியுமா? காத்திருங்கள் அடுத்த பதிவிற்கு...