விஜய் மல்லையா லண்டனில் மீண்டும் கைது; உடனடி ஜாமீன்


பிரபல தொழிலதிபர் விஜய்மல்லையா பல்வேறு வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன் வாங்கி, பல ஆண்டுகளாக திருப்பி செலுத்தாமல் லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


இந்நிலையில், பண மோசடி தொடர்பாக லண்டன் போலீசார் இன்று கைது செய்துதனர். அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு இந்தியா கொண்டுவரப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு மீண்டும் நீதிமன்றம் உடனடி ஜாமீன் வழங்கியது. கடந்த ஏப்ரல் மாதம் அவர் லண்டனில் கைது செய்யப்பட்டு இதேபோன்று உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.