சிபிஎஸ்இ தேர்வு எழுத ஆதார் எண் கட்டாயம்


2017-18 கல்வியாண்டு முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் தங்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் எனவும்  ஆதார் எண் இல்லாத மாணவர்கள் தங்கள் ஆதார் எண்ணின் பதிவெண்ணை வழங்கலாம் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

மேலும் சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற அனைத்து பள்ளிகளும் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆதார் எண்  விவரங்களை சிபிஎஸ்இ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.