ஊட்டியில் பூங்கா அமைக்கும் கர்நாடகா


ட்டியில், கர்நாடக அரசு தோட்டக்கலைத் துறை சார்பில், 35 ஏக்கரில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், ஊட்டியில், கர்நாடக அரசுக்கு மைசூரு மகாராஜா வழங்கிய, பல ஏக்கர் நிலம் உள்ளது. தற்போது பயன்படுத்தாமல் இருந்த இந்த இடத்தில் 35 ஏக்கர் பரப்பில் பூங்கா அமைக்கும் பணி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. 

பல்வேறு சிறப்புகளுடன் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இப்பூங்காவை வரும் திங்களன்று திறந்து வைக்க கர்நாடக தோட்டக்கலைத் துறை திட்டமிட்டுள்ளது. நுழைவுக்கட்டணமாக, 20 ரூபாய் வசூலிக்கபடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image : Ooty Botanical Garden
Share on Google Plus

About Kadugu

Kadugu.com | Tamil E-zine | News, Business, Entertainment, Astrology and more...