தங்க சேமிப்பு பத்­தி­ர முத­லீடு; தள்ளுபடி விலையில் சுத்த தங்கம்

மத்திய அரசின் தங்க சேமிப்பு பத்திர விற்பனை நாளை முதல் (அக்டோபர் 9) தொடங்கவுள்ளது. இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு, 2.5 சதவீதம் ஆண்டு வட்டி கணக்கிடப்பட்டு, ஆறு மாதத்திற்கொரு முறை வட்டி வழங்கப்படுகிறது. 

1 கிராம் முதல் 500 கிராம் வரை ஒருவர்  முதலீடு செய்யலாம். 999 சுத்தம் கொண்ட இதன்  ஒரு கிராம் விலை ரூபாய் 2996. டிஜிட்­டல் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், 50 ரூபாய் தள்ளுபடி வழங்­கப்­ப­டு­கிறது. அஞ்சல் அலுவகங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், பங்கு சந்தைகள் மூலம்  இந்த பத்திரத்தில் முதலீடு செய்யலாம்.

இந்த பத்திரத்தை கடன் பெறுவதற்கு பிணையமாக அளிக்கலாம். பங்கு சந்தையில், எப்போது வேண்டுமானாலும் அன்றைய சந்தை விலையில் விற்று பணமாக்கலாம்.

தங்க சேமிப்பு பத்­தி­ரத்­தில் முத­லீடு செய்ய, டிசம்பர் 27 வரை விண்ணப்பிக்கலாம்.