பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்படுமா ?


காற்று, ஒலி மாசை தடுக்கும் வகையில், கடந்த ஆண்டு  நவம்பரில், டில்லி மற்றும்  தேசிய தலைநகரங்களில்  பட்டாசு விற்பனைக்கு, உச்ச நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. சமீபத்தில் இந்த தடை தற்காலிகமாக விலக்கி கொள்ளப்பட்டது. பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் மாசு குறித்து ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்யவும்,  கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், பாதி எண்ணிக்கையிலான கடைகளுக்கு மட்டுமே, பட்டாசு விற்பனைக்கான உரிமம் வழங்கவும், கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பட்டாசு விற்பனைக்கு, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு விதித்த தடையை, மீண்டும் அமல்படுத்தக் கோரி,  உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்  செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது. 

Share on Google Plus

About Narayanan R

Kadugu.com | Tamil E-zine | News, Business, Entertainment, Astrology and more...