முன்பதிவு ரயில் டிக்கெட்டுகளுக்கு சேவை கட்டணத்தில் இருந்து விலக்கு


டந்த நவம்பர் மாதம், பழைய ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதைதொடர்ந்து, இணையவழி பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில்,  ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கு வசூலிக்கப்பட்டு வந்த சேவை கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.  

செப்டம்பர் 30-ந் தேதி வரை வழங்கப்பட்டு வந்த இந்த சேவை கட்டண  விலக்கை 2018  மார்ச் மாதம் வரை  ரயில்வே வாரியம் நீட்டித்துள்ளது.