விரைவு ரயில்களில் முன்பதிவு பட்டியல் ஒட்டும் முறை கைவிடப்பட்டது

Train

சென்னை சென்ட்ரல், எழும்பூர் உட்பட 4 ரயில் நிலையங்களில் புறப்படும் முக்கிய விரைவு ரயில்களில் முன்பதிவு பட்டியல் ஒட்டும் முறை கைவிடப்பட்டது. 

சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரயில்வே துறை இந்த புதிய முறையை அமல்படுத்தியுள்ளது. சென்டரல், எழும்பூர், உட்பட 4 ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் முக்கிய விரைவு ரயில்களில் பயணிகள் முன்பதிவு பட்டியல் இனி ஒட்டப்படாது.. அதற்கு பதிலாக, பயணிகள் செல்போனுக்கு முழு தகவல் அனுப்பி வைக்கப்படும். ஒவ்வொரு ரயில் நிலையங்களின் நுழைவு பகுதிகளில் பயணிகள் முன்பதிவு பட்டியல் ஒட்டிவைப்பதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.