குவைத் நாட்டில் இந்திய கைதிகள் விடுதலை


குவைத் நாட்டில் பல்வேறு குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த 15 இந்தியர்களின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்தும்,  119 சிறை கைதிகளின் தண்டனையை குறைத்தும் குவைத் நாட்டின் அமீர் ஷேக் சபா அல் அகமது அல் சபா கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில்  தண்டனை குறைக்கப்பட்ட 119 இந்திய கைதிகளில் 22 பேரை விடுதலை செய்யவும்,  44 இந்தியர்களின் தண்டனையை குறைத்து அங்குள்ள வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றவும், 53 இந்தியர்களின் ஆயுள் தண்டனையை 20 ஆண்டுகளாக குறைத்தும் குவைத் நாட்டின் அமீர் உத்தரவிட்டுள்ளார்.