சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு கவுன்சிலிங் தேதி அறிவிப்பு


இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள, சித்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில், அக்டோபர் 11 முதல்  14 வரை நடைபெற உள்ளது. இதற்கான தரவரிசை பட்டியல், www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான  அழைப்பு கடிதத்தை, இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.