பள்ளிகளில் ஜனாதிபதி, பிரதமர் புகைப்படங்களை வைக்க உத்தரவு


நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் பெயர்கள் கூட பள்ளி மாணவர்களுக்கு தெரியவில்லை. எனவே கோவாவில் அரசு மற்றும் அரசு நிதியுதவியுடன் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் மகாத்மா காந்தி, அம்பேத்கர், ஆகியோரது படங்களுடன் ஜனாதிபதி, பிரதமர் புகைப்படங்களையும்  வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கோவா மாநில கல்வித்துறை உயரதிகாரி தெரிவித்துள்ளார். 

கோவாவில் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பரீக்கர் தலைமையிலான பா.ஜ., கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.