சிறந்த புனித தலமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேர்வு

Madurai Meenakshi Amman Temple

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், நாடு  முழுவதும் 10 புனித தலங்கள் தேர்வு செய்யப்பட்டு, மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை தூய்மையான புனித தலமாக மேம்படுத்துவதற்காக தூய்மை மேம்பாட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், மீனாட்சி அம்மன் கோவில் இந்தியாவிலேயே சிறந்த புனித தலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான சிறப்பு விருது மத்திய அரசின் குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகத்தால் டெல்லியில் இன்று (அக்.2, திங்கட்கிழமை) நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கபடுகிறது.