ஜி.எஸ்.டி., தாக்கலுக்கு புதிய மென்பொருள்; பி.எஸ்.என்.எல்., சிறப்பு சலுகைஜி.எஸ்.டி., குறித்து சிறு தொழில் நிறுவனங்கள், வியாபாரிகளுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. 

இதற்கு தீர்வளிக்கும் வகையில், ஜி.எஸ்.டி., வரி கணக்கிடுதல், ஜி.எஸ்.டி., வரி விண்ணப்ப படிவங்களை அரசுக்கு தாக்கல் செய்ய, புதிய மென்பொருளை, 'டாக்ஸ்மேன் பப்ளிகேஷன்' நிறுவனத்துடன் இணைந்து, பி.எஸ்.என்.எல்., அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மென்பொருள் மூலம், தொழில்முனைவோர், வியாபாரிகள், எளிதாக ஜி.எஸ்.டி., வரி படிவங்கள் தாக்கல் செய்யலாம். 

www.bsnl.co.in எனும், இணையதளத்தில், பெயர் பதிவு செய்து, இந்த சேவையை பெறலாம். இதற்கு கட்டணமாக 6,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் உண்டு.