சென்னை செந்தமிழ் அகராதி  
சென்னை செந்தமிழ் அகராதி 5

பஜாரி (மூலம் : உருது - Bazari)
விபச்சாரி

பெரும்பாலானோர் இதன் பொருள் சண்டைக்காரி, கோபக்காரி என்றே எண்ணுகின்றனர். ஆனால் இதன் மூலமான உருதுவில் இதன் பொருள் விபச்சாரி என்பதே ஆகும்.

பெரும்பாலானோர் பஜாரி என்ற சொல்லை Bazar என்ற உருதுச் சொல்லுடன் தொடர்புபடுத்தி, ‘சந்தையில் சண்டையிடுவது போல் பேசும் பெண்’ என்று உருப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் Bazari என்ற தனி உருது சொல் விபச்சாரி என்று பொருள் தருகிறது.

ஜல்பு
ஜலதோஷம்

கல்ப்
மொத்தமாக குடித்தல்
Gulp - ஆங்கிலச் சொல் அப்படியே தமிழில் வழங்கப்படுகிறது.

குஜால் (மூலம் : உருது ‍ குசால்)
மனக்களிப்பு, மகிழ்ச்சி

மஜா (மூலம்: பாரசீகம், மஸா)
சுகம், ஆர்வம், மனக்களி, மனத்தில் தோன்றுவது (மனோபாவம்)

பந்தா (இந்தி)
வழி, பாணி (ஸ்டைல்)

இந்தியிலும் இச்சொல் இப்பொருளையே சுட்டுகிறது. Banda அல்ல Panta / Pantha. தமிழகம் முழுதும் பயன்படுத்தப்படும் ஒரு சொல் இது.

கலாய்‍த்தல் ‍(த‌மிழ்)
கலகித்தல், கலகம் செய்தல், சண்டையிடுதல்.

அங்க‌லாய்ப்பு என்ற‌ சொல்லை கேள்விப்ப‌ட்டிருப்பீர்க‌ள். ச‌லித்துக் கொள்ளுத‌ல் என்ற‌ மாதிரி பொருளில் அங்க‌லாய்த்த‌ல் என்ற‌ சொல் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும்.

அக‌ம் + க‌லாய்த்த‌ல் = அ(க)ங்க‌லாய்த்தல் = அங்கலாய்த்தல்
அகம் = மனம். கலாய்த்தல் = கலகித்தல்

அதாவது ‘மனக்கலக்கம்’ என்பது இதன் பொருள். (ம‌னதினுள் க‌ல‌கித்து துக்கித்தல்)

அபேஸ் (ஆங்கில‌ம் ‍- Abase)
விழுங்குத‌ல், க‌வ‌ர்த‌ல், திருட்டு

ஜகா (இந்தி)
இட‌ம்

‘ஜகா வாங்குதல்’ என்று சொல்வ‌து பின் வாங்குத‌ல், த‌ப்பியோட‌ல் என‌ப் பொருள் த‌ரும்.