சென்னை செந்தமிழ் அகராதி  
சென்னை செந்தமிழ் அகராதி 4

தூமை
பெண்டிர் மாதவிலக்கின் போது வெளிப்படும் உதிரம்.

சென்னையின் கீழ்த்தட்டு மக்களிடம் சர்வசாதாரணமாக புழங்கும் இச்சொல்லின் பொருள் பெரும்பாலானோர்க்கு நன்கு தெரியும். ஆயினும் தூமை, தூமைக்குடிக்கி போன்ற சொற்கள் சென்னையில் மிகப்பரவலாக ஆளப்படுவது வருந்தத்தக்கது. சில திரைப்படங்களில் கூட இச்சொல் உபயோகப்படுத்தப்பட்டு விட்டது.

தூய்மை என்ற சொல்லின் குறுக்கமாகவும் இது கையாளப்பட்டுள்ளது.

தூ(ய்)மை = தூமை, தூய்மை குறுகினால், தூமை என்று கெடுகிறது. (மரூஉ) : பார்த்தீர்களா தமிழின் நுட்பத்தை.

எனினும் பொதுவில் வசைக்கு மட்டுமே எடுத்தாளப்படும், தவிர்க்கப்பட‌ வேண்டிய சொல் இது.

நசை
விருப்பம், தொந்தரவு

ந‌சை என்ப‌து தொந்த‌ர‌வு த‌ரும், ந‌ச்ச‌ரிப்பைக் குறிக்க‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டுவ‌து க‌ண்கூடு. 'ந‌ச‌ ந‌ச' என்று ம‌ழை பெய்யுது, ச‌ரியான 'ந‌ச‌'டா நீ ஆகியவை உதார‌ணங்க‌ள்.

மற்ற பொருள்கள் : தாய், நசைப் பேச்சு ‍* காதல் மொழி * விருப்ப‌மான‌ அன்புப்பேச்சு. திருக்குறளில் ஆசை, விருப்பம் என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது.

டாபர் (மூலம் - உருது : தவ்வா)
டாப‌ர் மாமா

கூட்டிக் கொடுப்பவன் (விப‌ச்சார‌ த‌ர‌க‌ன்)