நையாண்டி விலாஸ்

நம்ம விஜயகாந்த் 'முதல்வன்' பாணியில கலைஞரை பேட்டி எடுத்தா எப்டி இருக்கும்?

இந்த பதிவை படிக்கும் முன் முதல்வன் பேட்டியைப் பார்க்கவும்.

http://www.youtube.com/watch?v=O-0RHrzLLB0

இதோ பேட்டி ......

விஜயகாந்த் : அய்யா வணக்கம்.

கலைஞர் : ம்ம்... இருக்கட்டும் இருக்கட்டும். இப்போ இந்த வேலைக்கு வந்துட்டியா...?

விஜயகாந்த் : ஆமா. இனிமே கேள்வி கேக்கறது தான் என் வேலை.

கலைஞர் : பேசாம கலைஞர் தொலைக்காட்சியில சேர்ந்துடு. குவிஸ் புரோகிராம் நடத்து. அங்கே கேள்வி கேட்டாலாவது உனக்கு நாலு காசு கூட கிடைக்கும்.

விஜ‌ய‌காந்த் : அதெல்லாம் இருக்கட்டும்.... இப்போ என்னோட கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க. உங்க‌ மேலே ஏக‌ப்ப‌ட்ட‌ ஊழ‌ல் குற்ற‌ச்சாட்டு இருக்கே...

கலைஞர் : குற்றம் சொல்றவங்க சொல்லிக்கிட்டுதான் இருப்பாங்க தம்பி..க‌லைஞ‌ர் தொலைக்காட்சியில‌ ந‌ம்ம‌ த‌மிழ் நாடு ஆறு மாச‌மா தொட‌ர்ந்து 'இந்தியாவின் சிற‌ந்த‌ மாநில‌ங்க‌ள், டாப் டென்லே' முத‌ல் இட‌த்திலேயே இருக்கு தெரியுமா?

விஜ‌ய‌காந்த் : அதென்ன‌ ஆறுமாசக் கணக்கு அய்யா...

க‌லைஞ‌ர் : க‌லைஞ‌ர் டிவி ஆர‌ம்பிச்சி ஆறுமாச‌ம் தானே ஆகுது.

விஜ‌ய‌காந்த் : ஓஹோ............

கலைஞர் : இரண்டு வ‌ருஷ‌ம் முன்னாடி முப்ப‌தாவ‌து இட‌த்துலே இருந்த‌து த‌ம்பி..... அப்போ ந‌ட‌ந்த‌து அம்மையார் ஆட்சி... தம்பி..... நான் ஆட்சிக்கு வந்ததுக்கு அப்புறம், படிச்சவங்க எண்ணிக்கை 62.5% சதவீதம் ஆகியிருக்கு.

விஜயகாந்த் : ஆனா, கேரளாவுலே 100 சதவீதமா இருக்கே ஐயா.....?

கலைஞர் : நம்பர் ஒன்....... ந‌ம்ப‌ர் ஒன்....... ந‌ம்ப‌ர் ஒன்....

விஜயகாந்த் : முத‌ல்வர் அவ‌ச‌ரமாக‌ ந‌ம்ப‌ர் ஒன் போக‌ நினைக்கிறார்....... சிறிய‌ விள‌ம்ப‌ர‌ இடைவெளிக்குப் பின் பேட்டி தொட‌ரும்........

க‌லைஞ‌ர் : யோவ், த‌மிழ் நாடு தொழில்துறைலே ந‌ம்ப‌ர் ஒன்னுன்னு சொன்னேன்யா....

விஜ‌ய‌காந்த் : வெண்க‌ல‌ப்ப‌த‌க்க‌ம் வாங்க‌றவ‌னை விட‌ த‌ங்க‌ப்ப‌த‌க்க‌ம் வாங்க‌ற‌வ‌னுக்குத்தானே ம‌திப்பு அதிக‌ம்...?

க‌லைஞ‌ர் : த‌ங்க‌ப்ப‌த‌க்க‌ம் தெரியும்.... என் அருமை ந‌ண்ப‌ர் சிவாஜி கணேசன் ந‌டித்த‌து. வெண்க‌ல‌ப்ப‌த‌க்க‌ம் ப‌ற்றி எதுவும் என‌க்கு தெரியாது. நான் திரைப்படம் பார்ப்பதில்லை.

மேலும் புள்ளி விவரங்களை அள்ளி வீசுகிறார் கேப்டன்.

கலைஞர் : தம்பி..... புள்ளி விவரங்களை சரியா தெரிஞ்சுகிட்டுதான் பேசணும்.....

விஜயகாந்த் : புள்ளி விவ‌ர‌மா....... இந்தாங்க‌ சி.டிக்க‌ள்....

கலைஞர் : என்ன‌ சி.டி. இதெல்லாம்...

விஜயகாந்த் : இது ரமணா படத்துல‌ நான் அள்ளி விட்ட புள்ளி விவ‌ர‌ங்க‌ள், இது தென்ன‌வ‌ன்லே அள்ளிக் கொட்டிய புள்ளி விவ‌ர‌ங்க‌ள்..... இது பேர‌ர‌சு, இது த‌ர்ம‌புரி, இது சுதேசி...

கலைஞர் : நிறுத்து த‌ம்பி.......... புள்ளி விவ‌ர‌ம் கேட்டா சி.டியா கொடுக்க‌றே நீ? இதெல்லாம் திருட்டு விசிடின்னு உன்னை உள்ளே த‌ள்ள‌ முடியும் தெரியுமா.....

விஜயகாந்த் : ஐசிஐசிஐ வங்கியிலே கூட‌ தமிழ் நாட்டு அரசாங்கத்துக்கு அடுத்த தவணை கடனை தராம கேன்சல் பண்ணிட்டாங்களாமே? அமைச்ச‌ர்க‌ள் ஊழ‌ல் ப‌ண்ணிட்டாங்க‌ளாமே...?

கலைஞர் : அது உன‌க்கு தெரியாது த‌ம்பி.... ஐசிஐசிஐ வ‌ங்கி அட‌மான‌த்துக்கு ஏதாவ‌து வேணும்னு கேட்டான். ந‌ம்ம தமிழக அமைச்ச‌ர‌வையை அட‌மான‌மா எடுத்துக்க‌ சொன்னேன்…….. எட்ட‌ணா கூட‌ தேறாதுன்னு சொல்லிட்டான்........ ந‌ம்ம‌ மாநில‌த்தையே அட‌மான‌மா கேட்டு ஆயிர‌த்து முன்னூத்தி அறுவ‌த்தேழு க‌ண்டிஷ‌ன் போட்டான்...

விஜயகாந்த் : அதெல்லாம் என்ன‌ க‌ண்டிஷ‌ன், கொஞ்ச‌ம் விவ‌ர‌மா சொல்லுங்க‌ அய்யா...

கலைஞர் : அதெல்லாம் நான் உங்கிட்டே சொல்ல‌ அவ‌சிய‌ம் இல்லை. ம‌க்க‌ள் கிட்டே சொல்லிக்க‌றேன்.

விஜயகாந்த் : மக்கள் தான் பார்த்துக்கிட்டு இருக்காங்க‌... ப‌தில் சொல்லுங்க‌...

கலைஞர் : தம்பி, அது 1367 பக்க ரிப்போர்ட். உட்பிரிவு ஏபிசிடின்னு 27 ப‌குதி இருக்கு. செகரட்டரியேட்லே பதினைஞ்சு ரூபாய்க்கு சலான் கட்டி, வாங்கிப் படி. ஆனா ரிப்போர்ட் ஆங்கில‌த்துல‌ இருக்கு. உன‌க்கு ஆங்கில‌ம் தெரியாதே. எப்படி படிப்பே நீ?

விஜயகாந்த் : அய்யா நீங்க அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடி வசதியான குடும்பத்தை சேர்ந்தவரா?

கலைஞர் : இல்லப்பா, சாதாரண ஏழை விவசாயக் குடும்பம்.

விஜயகாந்த் : ஒங்க சம்பளம் எவ்வளவுங்க?

கலைஞர் : பிடித்தம் போக அம்பதாயிரம் பக்கத்துல வரும்.

விஜயகாந்த் : கூட்டிக்கழிச்சி பார்த்தா..... இத்தனை வருஷத்துல இருவத்தைஞ்சி லட்சம் கூட தாண்டாது, ஆனா இப்போ ஒங்க சொத்து மதிப்பு மூவாயிரம் கோடிக்கு மேலேன்னு சொல்றாங்களே.........

கலைஞர் : இது அபாண்டம். வேணும்னா வழக்கு போடு. நீதிமன்றத்துலே நான் குற்றமற்றவன்னு நிரூபிக்கறேன். நீதிபதி என்னோட நண்பர்தான்.

தி.மு.க‌.வின் தேர்த‌ல் அறிக்கையை காட்டுகிறார் கேப்ட‌ன்.

விஜயகாந்த் : இது ஞாப‌க‌ம் இருக்கா?

கலைஞர் : பார்த்த மாதிரி இருக்கு...

விஜயகாந்த் : இது உங்க‌ தேர்த‌ல் வாக்குறுதி புத்த‌க‌ம்.

கலைஞர் : எப்படி மற‌க்க முடியும்..... புத்தக‌த்தை எழுதினதே நான் தானே...

புத்தகத்தை வாசிக்கிறாரவிஜயகாந்த் : சாதி இல்லாத‌ ச‌முதாயம் அமைக்க‌.......

கலைஞர் : சட்டம் ஒழுங்கில் அமைதியை நிலை நாட்ட, பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க, இலவச டிவிடி பிளேயர்..... ஒத்த‌ ரூபாய்க்கு ரெண்டு கிலோ ப‌ருப்பு...... இதுல‌ 'ஒ'க்கு ப‌தில் 'ஓ'ன்னு அச்சாகியிருக்கும்...... ..த்தா... எழுத்துப்பிழை..... அதை ம‌ற‌க்க முடியுமா?

(தலையில் அடித்துக் கொள்கிறார் விஜயகாந்த்)

விஜயகாந்த் : இதெல்லாம் வந்துருச்சின்னு சொல்றீங்களா?

கலைஞர் : வர‌லைங்கறியா?

விஜயகாந்த் : சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவோம்னு சொன்னீங்க, சாதிக்கலவரத்தை ஊக்குவிக்கறதே நீங்கதானே.......

வீடியோவை ரிமோட்டில் முடுக்குகிறார் கேப்டன். பயங்கர கலவர காட்சிகள் திரையில் காட்டப்படுகின்றன. அரண்டு விடுகிறார் கலைஞர்.

==============

\\ கலவரத்தின் பின்னணியில் கலவரத்தை தூண்டி விடும்படி கலைஞர் கமிஷனருக்கு உத்தரவிடும் ஒயர்லெஸ் உரையாடல் கேட்கிறது. //.....

கமிஷனர் : சார் அண்ணா சாலையில‌ ப‌ய‌ங்க‌ர‌ க‌ல‌வ‌ர‌ம் சார். என்ன‌ ப‌ண்ண‌லாம்?

கலைஞர் : யோவ் விடுய்யா அடிச்சிக்கிட்டு சாவ‌ட்டும்.....

கமிஷனர் : சரி சார். அப்புறம், சூட்டிங் ஆர்டர் வேணும் சார்.......

கலைஞர் : என்னய்யா பெரிய ரோதனையா போச்சி உன்னோட, சரி சரி சுட்டுக்கோ, எவன் செத்தாலும் பரவாயில்லை....

கமிஷனர் : இல்லை சார், அந்த சூட்டிங் ஆர்டர் இல்ல சார்.... தலைமை செயலகத்துலே சூட்டிங் எடுக்க சினிமாக்காரங்க வந்துருக்காங்க..... அதுக்கு சூட்டிங் ஆர்டர் வேணும் சார்.

==================

விஜயகாந்த் : சொல்லுங்க... உங்களுக்கு மக்கள் நலனை விட உங்க சுய நலம் தானே முக்கியம்?

தண்ணீர் குடித்து மஞ்சள் துண்டால் வாயைத் துடைத்துக் கொள்கிறார் கலைஞர். பின், வாயின் மீது ஒற்றை விரலை வைத்து (ரகுவரன் போல) காட்டுகிறார்.

விஜயகாந்த் : நேயர்களே... நமது கேள்விகளால், இவருக்கு நிஜமாகவே ஒன்னுக்கு வந்துருச்சின்னு நினைக்கிறேன்.

கலைஞர் : கேமராவை ஆஃப் பண்ண சொல்லு. கேமராவை ஆஃப் பண்ணு........ - கதறுகிறார்.

சிறிய சலசலப்புக்கு பின் கேமரா ஆஃப் செய்யப்படுகிறது.

கலைஞர் : என்னை மாதிரி குரல் வளம் இருக்கறவனை வச்சி டப்பிங் பண்ணி இருக்கே தம்பி. எதிர்க்கட்சியில எவ்வளவு பணம் வாங்கினே?

விஜயகாந்த் : அது இருக்கட்டும்...... நீங்க எவ்வளவு கொடுப்பீங்க இந்த கலவர வீடியோவுக்கும், ஒயர்லெஸ் பேச்சுக்கும்....

துண்டு போட்டு கைகளை மூடி பேரம் நடக்கிறது.

கலைஞர் : ஐநூறு கோடி இருக்கற என் சுவிஸ் வங்கி கோட் நம்பர் கேக்கறே. அதிகம் தான், இருந்தாலும் பரவாயில்லை, எடுத்துக்கோ... இந்தா சுவிஸ் பேங்க் கோடு நம்பர்...... ச‌ரி சி.டி எல்லாம் கொடு.... (வாங்கிக் கொள்கிறார்).

வெளியில் வருகின்றனர்.

கலைஞரின் எடுப்பு : என்ன ஐயா பேரம் பேசுனீங்க? தேர்தல் பேரமா?

கலைஞர் : அதில்லைய்யா... அந்த கலவர வீடியோ, அப்புறம் அந்த ஒயர்லெஸ் மேட்டர்... அதுக்குத்தான்...... ஐநூறு கோடி அடிச்சிட்டான்...

எடுப்பு : தலைவரே........................ அந்த ஆளு ஒரு டுபாக்கூர். அவரு போட்டுக்காட்டினது, அவரே நடிச்ச படங்களிலே வர்ற கலவர சீன் தான். டப்பிங் பேசினது மயில்சாமி....... ஏமாந்துட்டீங்களே தலைவரே............

 ====++++====