கடுகு.காம்
- Kadugu.Com
நையாண்டி விலாஸ்
நடிகர் பரத்குமார் புதுக்கட்சி தொடங்கினார்
05-05-2008
பிரபல நடிகர் பரத்குமார் புதிதாக கட்சி தொடங்கியுள்ளார். அகில உலக எமத்துவ மக்கள் கட்சி என்று அவரது புதிய கட்சிக்கு பெயரிடப்பட்டுள்ளது.
பரத் குமார் நடித்த சில பிரபல திரைப்படங்கள்…. ஆயி, ஓட்டாமை, ங்கொய்யா, பித்தன், சந்திர வம்சம், சரசு, சப்பைக்கிளி குத்துச்சரம் ஆகியவை.
நேற்று (அவர் வீட்டு) கொல்லையில் நடந்த முதல் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். மரியாதையாக தனக்கே வாக்களிக்கும்படி மக்களுக்கு அவர் மிரட்டல் விடுத்தார். மீறினால் ‘தோலை உரித்து விடுவதாக’ மிரட்டிய அவர் தான் முதல்வர் ஆக முடியாத நிலை ஏற்பட்டால் மீண்டும் நடிக்க வருவதாகவும் பயமுறுத்தினார்.
மீண்டும் நடிக்க வருவேன் என்று பீதியைக் கிளப்பும் அவரை கைது செய்யவேண்டும் என பொதுமக்கள் குரல் எழுப்பியுள்ளனர்.
தமிழ் நாட்டில் வெற்றிலை பாக்கு மற்றும் டயர் செருப்பு விற்பனை சில ஆண்டுகள் முன்பு சூடு பிடிக்க காரணமானவர் பரத் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
====++++====