நையாண்டி விலாஸ்

தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுகிறது - விஜயகாந்த்
29-04-2008

அரசியல்வாதிகள், அதிகாரிகளின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதாக பரபரப்பான செய்திகள் அடிபடுகின்றன. பல அரசியல்வாதிகள் இது குறித்து கவலை தெரிவித்துள்ளனர். விஜயகாந்த் கூட சில நாட்கள் முன்பு தனது செல்போன் மற்றும் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதாக கூறினார்.

இடம் : அரசாங்கம் படப்பிடிப்புப் பகுதி

செல்பேசி ஒலித்தவுடன் எடுக்கிறார் கேப்டன்.

விஜயகாந்த் : அலோ………

பிரேம‌ல‌தா : ஏங்க நாந்தான்.

விஜயகாந்த் : சொல்லு, என்ன‌ விஷ‌ய‌ம்

பிரேம‌ல‌தா : இப்போ எங்க‌ இருக்கீங்க‌?

விஜயகாந்த் : ஜூட்டிங்லே இருக்கேன்

பிரேம‌ல‌தா : ச‌ரி ச‌ரி, வ‌ரும்போது புளி வாங்கிட்டு வாங்க‌, ம‌ற‌ந்துடாதீங்க‌….. சுத்தமா புளி இல்லை, புளி இல்லாம வீட்டுக்கு வராதீங்க.

விஜயகாந்த் : ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்……… (எகிறுகிறார்) எத்தனை தடவை சொல்றது உனக்கு? இதையெல்லாம் போன்ல சொல்லலாமா? அறிவிருக்கா உனக்கு? நான் வேலூர்ல போய் களி திங்கணுமா? ஏற்கனவே போனை ஒட்டுக்கேக்கறாங்க… இப்போ நீ வேற புளி வேணும் அது இதுன்னு பேசிக்கிட்டு இருக்கே………

கடுப்புடன் செல்பேசியை கீழே வைக்கிறார்.

சில நிமிடங்களில் அடுத்த அழைப்பு வ‌ருகிறது.

விஜயகாந்த் : அலோ… யாரு பேச‌றது?

விஜயகாந்தின் ம‌க‌ன் : நான்தான் பிர‌பாக‌ர‌ன் பேச‌றேன். வ‌ரும்போது ஒரு பாக்கெட் டைகர் பிஸ்கெட் வாங்கிட்டு வ‌ந்துருப்பா………..

விஜயகாந்த் : போனை வைடா…. தடியா. எத்த‌னை த‌ட‌வை சொல்லியிருக்கேன். என‌க்கு நீ போன் ப‌ண்ண‌க்கூடாது, ப‌ண்ணினாலும் உன் பேரை ம‌ட்டும் சொல்லவே கூடாதுன்னு…….. இதுல‌ ஒன‌க்கு டைக‌ர் வேற‌ வேணுமா…..

செல்பேசியை துண்டிக்கிறார்.  இய‌க்குன‌ர் விஜ‌ய‌காந்திட‌ம் வ‌ருகிறார்.

இயக்குனர் : இப்போ கிளைமாக்ஸ் சீன் பத்தி சொல்றேன் சார். அப்டியே வாசல்லே இருந்து புலிப்பாய்ச்சலா ஓடி வர்றீங்க……

எதற்கு அடி விழுகிறது என்று புரியாமல் இயக்குனர் தர்ம அடி வாங்கிக் கொள்கிறார்.

 ====++++====