கடுகு.காம்
- Kadugu.Com
எதற்காக இருக்கலாம்?
தீபாராதனை, ஆரத்தி
ஆலயங்களில் தெய்வங்களுக்கு தீபாராதனை காட்டுவதன் பொருள் என்னவாக இருக்கலாம்?
நெருப்பு பவித்திரமானது, எக்களங்கத்தையும் தூய்மைப்படுத்தக் கூடியது. அனைத்து உயிர்களுக்கும் உயிராதாரமாக விளங்கும் சூரியனின் வடிவம் நெருப்பாகும். இவை ஒருபுறமிருக்க, அக்காலத்தில் குழல் விளக்குகளும், குண்டு பல்புகளுமா இருந்தன? பக்தர்கள் தெய்வ தரிசனத்தை தெளிவாகக் காண ஏதுவாகவே தீப ஒளியில் ஆராதனை செய்யும் வழக்கம் வந்திருக்கக் கூடும்.
இதே போல் வீட்டுக்கு வரும் புதுமணத்தம்பதி மற்றும் முக்கிய விருந்தினரைக் கூட ஆரத்தி எடுத்து வரவேற்பது நமது வழக்கம். ஆரத்தியின் போது அவர்களுக்கு தீபாராதனை காட்டி வரவேற்கப்பட்டு திலகமிடப்பட்டு இறுதியில் மஞ்சள், சுண்ணாம்பு கலந்த செந்நீர் விருந்தினர்களின் காலில் ஊற்றப்படுகிறது. மஞ்சள், சுண்ணாம்பு கலந்த நீர் மிகச் சிறந்த கிருமி நாசினி என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. புதிதாய் வருவோரை மங்கலத்துடன் வரவேற்கவும், தீய சக்திகள் நெருங்காதிருக்கவும், கண் தீட்டை நீக்கும் பொருட்டும் இச்சடங்கு செய்யப்படுகிறது.
====++++====