எதற்காக இருக்கலாம்?

கணவன் சாப்பிட்ட பின் தான் மனைவி சாப்பிட வேண்டுமா?

இது என்ன நியாயம்? அநீதி அல்லவா? நியாயப்படி பெண்ணுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் என்றெல்லாம் யோசிக்கத் தோன்றுமே....

பெண்களை தெய்வமாக வழிபட்ட நமது நாட்டில், இது போன்ற சம்பிரதாயங்கள் பெண்ணினத்தை வஞ்சிக்க வகுக்கப்பட்ட நியதிகளாக இருக்க முடியாது.

பழங்காலத்தில் பெரும்பாலும் உடலுழைப்பால் ஜீவனம் செய்து கொண்டிருந்தனர். உழவு, வியாபாரம், கூலி வேலை என்று பலதரப்பட்ட வேலைகள் இன்று போல் அன்றும் இருந்தன. ஒருவன் உழைப்பாளியாக இருந்தால் நிச்சயம் அதிகமாக சாப்பிடுவான். அவன் செய்த வேலையைப் பொருத்தே அவனது அப்போதைய பசி அமையும். நெடுந்தூரம் சென்று நீண்ட வேலையை செய்ய இருப்பவன், அதற்கேற்ற அளவு உண்ண நினைப்பது இயல்பு. இன்று போல் உணவு விடுதிகளும், கையேந்தி பவன்களும் கிடையாது * நினைத்தவுடன் போய் சாப்பிட. சாப்பிட வேண்டும் என்றால் தன் வீடு, உறவினர் வீடு, சத்திரம், அன்னதானம் ஆகியவற்றில் மட்டுமே சாப்பிட முடியும். கணவன் சென்ற பிறகு மனைவி சமைத்து சாப்பிட்டுக் கொள்ளலாம், கணவன் எங்கே போய் சாப்பிடுவான்?

கணவனே பொருளீட்டும் நபராக இருந்த காலம் அது. வெளியில் சென்று வருபவன் அளவு குறைவாக உண்டு விட்டு சென்று, பின் பசியெடுத்தால் அவனுக்கு சிரமம் என்று இந்த முறை வந்திருக்க வேண்டும். அதாவது உழைப்பவனுக்கு முன்னுரிமை தரப்பட்டுள்ளது, அவ்வளவு தான். இவ்விஷ‌யத்தைப் பொறுத்தவரை பெண்கள் காலங்காலமாக வஞ்சிக்கப்பட்டு வந்திருப்பதாக எழும் குற்றச்சாட்டானது தாய்மை உணர்வுடன் வகுக்கப்பட்ட ஒரு நெறியை புரிந்து கொள்ளாமல் அவமதிப்பதாகவே அமையும்.

 ====++++====