கடுகு.காம்
- Kadugu.Com
எதற்காக இருக்கலாம்?
கர்ப்பிணியின் கணவன் செய்யக் கூடாதவை
எதற்காக இருக்கலாம்?
நம் நாட்டில் பல்வேறு சம்பிரதாயங்களை, குறிப்பாக இந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள் கடைப்பிடிக்கின்றோம். பெரும்பாலும் பல சடங்கு சம்பிரதாயங்களுக்கும், பழக்க வழக்கங்களுக்கும், நம்மிடையே வழங்கப்பட்டு வரும் பல்வேறு சொற்றொடர், பழமொழிகளுக்கும் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு மூலம், காரணம், பொருள் தெரிந்திருப்பதில்லை. அவற்றுக்கான காரணம் மற்றும் பொருள் தெரியாத காரணத்தினாலேயே அவை நாளடைவில் ஒதுக்கப்பட்டு வருகின்றன.
இந்த சம்பிரதாயங்கள், நம்பிக்கைகளுக்கு எண்ணற்ற எதிர்ப்புகள் தோன்றின, எதிர்ப்புகள் வலுத்தும் வருகின்றன. இவற்றின் மீது நம்மவர்களுக்கே நம்பிக்கை குறைந்து வருகிறது.
நமது நோக்கம் : காரணம் தெரியாத அல்லது புரியப்படாத மத மற்றும் நமது மண்ணின் சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், நிமித்தம், சகுனங்கள், பழக்கவழக்கங்கள், பழமொழிகள், சொலவடைகள் போன்றவற்றுக்கு சொல்லப்பட்ட மூல காரணங்கள் அல்லது கற்பிக்கப்பட்ட காரணங்கள் அல்லது ஏற்றுக்கொள்ளத்தக்க காரணங்களை "எதற்காக இருக்கலாம்?" எனும் தலைப்பின் கீழ் ஆராய்தல். பல அறிஞர்கள் இவை குறித்து ஏற்கனவே கருத்துரைத்துள்ளனர். ஒவ்வொருவரும் தமக்குக் கிடைத்த தகவல்களையும், தமது கருத்தையும் சிறப்பாகக் கூறியுள்ளனர். அவையும் தேவைப்பட்டால் இங்கு எடுத்தாளப்படும்.
====++++====